மேலே காட்டப்படும் படத்தில் இருப்பவர் நேற்று புத்தளம் ஜூசிவாஸ் தஹம் பாடசாலையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட அப்பிரதேச பௌத்த மதகுரு.
இவர் முஸ்லிம்களுடன் ஏனைய மதத்தவர்களுடன் மிகவும் அந்நியோன்னியமாக பழகும் சுபாவம் கொண்டவர்.
முஸ்லிம்களின் நோன்பு திறக்கும் நிகழ்வான இப்தார் நிகழ்வின்போது மேற்படி பௌத்த மதகுரு இப்தாருக்கான உணவுகளை பரிமாறுகின்ற ஒரு காட்சியே இது.
மனிதர்களை உள்ளத்தால் நேசிக்கின்ற பண்பு மேலோங்குகின்ற போது மதமோ, இனமோ எந்தவொரு நற்பணிக்கும் தடையாக அமைவதில்லை.