3 வருடங்களின் பின்னர் இந்த ஆண்டில் 4, 000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

Date:

நாட்டின் பொருளாதாரம்  வலுவடையும் பட்சத்தில், அடுத்த வருடமும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மேலதிக நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற மேல் மாகாண பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

2,320 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இதன் போது நியமனம் வழங்கப்பட்டது. மூன்று வருடங்களின் பின்னர் 2024ஆம் ஆண்டில் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்கால சந்ததியை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2300 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்படுகிறது. மேலும் 700 நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. வெற்றிடங்களுக்கு ஏற்ப மேலும் 1,000 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இந்த வருடத்தில் சுமார் 4,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே இந்த நியமனங்களை வழங்க முடிந்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொவிட் தொற்றுநோய் காரணமாக இந்த நியமனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மறைப்பெறுமானத்தை எட்டியது. ஆனால் அரசாங்கம் மேற்கொண்ட சரியான பொருளாதார முகாமைத்துவத்தினால் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...