சமூகங்களை இணைக்கும் ஊடக பணிக்கு பஹன மீடியாவின் பணி முன்னுதாரணமானது: சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவருக்கான வரவேற்பு நிகழ்வில் தெரிவிப்பு

Date:

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள  சவூதிக்கான இலங்கை தூதுவரை கௌரவிக்கும் முகமாக பஹன மீடியா பிரைவெட் லிமிட்டெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (05) கொழும்பு வெள்ளவத்தை மியாமி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலாநிதி கலகம தம்மரன்சி தேரர், சிவ ஸ்ரீ பாபு சர்மா குருக்கள், அருட்தந்தை நிஷாந்த குரே, அல்ஹாஜ் அஸ்ஸெய்ட் கலாநிதி ஹசன் மௌலானா ஆகிய சர்வ மதத்தலைவர்களும் கலந்துகொண்டனர்.

சவூதி அரேபியாவின் புதிய தூதுவராக விரைவில் சவூதி அரேபியா செல்லவுள்ள ஓ.எல்.அமீர் அஜ்வத்.பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அதுமட்டுமின்றி, சவூதி அரேபியாவின் முன்னாள் தூதுவர்கள், முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் பைசல் ஆப்தீன், முன்னாள் செய்திப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய, கைத்தொழில் அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுர சிறிவர்தன,கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டனர்.

நிகழ்வின் பிரதான உரையை சண்டே டைம்ஸ் பிரதி ஆசிரியர் அமீன் இஸ்ஸதீன் நிகழ்த்தினார்.

இதன்போது ‘சர்வதேச ஊடகங்கள் பக்கச்சார்பான செய்திகளை வெளியிடுவது காசா போர் தொடர்பில் வெளியாகும் செய்தி அறிக்கைககளில் நிரூபணமாவதாக அவர் சுட்டிக்காட்டினார். இது ஊடக விபச்சாரமாக தற்போது மாறியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து அங்கு வந்திருந்த அனைத்து மதத் தலைவர்களும்  சிறப்பு உரை நிகழ்த்தினர்.

பின்னர் பிரதம அதிதியாக கலந்துகொண்ட சவூதி அரேபியாவின் புதிய தூதுவர் மேன்மை தாங்கிய ஓ.எல். அமீர் அஜ்வத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வுக்கு வரும்போதே இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை என்னால்  காணமுடிந்ததாகவும் இந்த பணியை பஹன மீடியா சாதித்து வருகின்றமை பாராட்டத்தக்கது.

‘இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவையும், எதிர்காலத்தில் சவூதி அரேபியாவிடமிருந்து இலங்கை எவ்வாறு அதிக ஆதரவைப் பெற முடியும் என்பதையும் விபரித்து பேசினார்.

இதேவேளை சவூதி அரேபியாவின் புதிய தூதூவர் அனைத்து மதத் தலைவர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

பின்னர்,புதிய தூதுவருக்கு பஹன மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அஸ்ஸெய்யித் சாலீம் ரிபாயி மௌலானா, அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அப்துல் முஜீப் மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அஸ்ஸெய்யித் திஹாம் மௌலானா ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தனர்.

சபையில் உரையாற்றிய முன்னாள் செய்திப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன்சூரிய, நாடுகளுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கான பஹன மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பணி சிறப்பானது என சுட்டிக்காட்டினார்.

தற்போது எந்த ஊடகமும் செய்யாத சேவையையும் முன்னுதாரணத்தையும் பஹன மீடியா  வழங்கி வருவதாக அவர் வலியுறுத்தினார்.

அதன் பின்னர், இலங்கை தேசம் என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் ஒரு நாடாக நாம் முன்னேற்றமடைவோம் என கலாநிதி சந்திமா விஜேகுணவர்தன தெரிவித்தார். மற்றவரின் மதம் மற்றும் நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பஹன மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு உறுப்பினர் ஹனான் ஹுசைன் நன்றி உரையுடன் நடைபெற்ற இரவு விருந்திற்குப் பிறகு இப்தார் விழா இனிதே நிறைவுற்றது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...