இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதை மீளாய்வு செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை

Date:

இலங்கையில் அமைதி வழியில் நடத்தப்படும் போராட்டங்களை நசுக்குவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

2022 மார்ச் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நடைபெற்ற 30 போராட்டங்களில், போராட்டக்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் அதிக பலத்தை பிரயோகித்ததாக சர்வதேச மன்னிப்பு சபையின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளத் தவறியுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

சட்டவிரோத பலவந்த பிரயோகத்திற்கு காரணமான அதிகாரிகளை நேரடி விசாரணைக்கு உட்படுத்தி சட்டத்தின் முன் நிறுத்தும் வரை இலங்கை அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை அவசரமாக மீளாய்வு செய்யுமாறு சர்வதேச மன்னிப்புச் சபை , சர்வதேச சமூகத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளது.

Popular

More like this
Related

சவூதியின் தமாம் சர்வதேச விமான நிலையத்திற்கான பயணங்கள் தற்காலிகமாக ரத்து

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு மற்றும் சவூதி அரேபியாவின் தம்மாம் நகருக்கு...

 மஹிந்த ராஜபக்ச கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதி;  குடும்பத்தினர் மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக கொழும்பிலுள்ள தனியார்...

சவூதி விமான நிலையம் மீது புதிய தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று (11) நடத்தப்பட்ட புதிய தாக்குதலில்...