75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்: தத்தளிக்கும் துபாய் விமான நிலையம்

Date:

75 ஆண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் கடுமையான வெள்ளப் பேரழிவைச் சந்தித்துள்ளன.

இதன் காரணமாக ஓமன் மாநிலத்தில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமனில் இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தலைநகர் மஸ்கட் உள்பட பல நகரங்களில் பள்ளிக்கூடம், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பிராந்தியங்களில் பலத்த சூறாவளி காற்று வீசியதால் பலத்த மழை பெய்து வருகிறது. இதனுடன், துபாய் உட்பட எமிரேட்ஸின் ஏழு பகுதிகளிலும் வெள்ளம் பதிவாகியுள்ளது.

அத்துடன் புகழ்பெற்ற துபாய் மால், மால் ஆஃப் தி எமிரேட்ஸ், முழங்கால் அளவு தண்ணீரில் உள்ளதுடன் அதன் மேம்பட்ட சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் சாலைகள் கூட வெள்ளத்தில் மூழ்கின

இதன் விளைவாக, அதிகாரிகள் அதன் நடவடிக்கைகளை மட்டுப்படுத்த வேண்டியிருந்ததுடன் பல விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

மேலும் எமிரேட்ஸ் மற்றும் ஃப்ளை துபாய் உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் துபாய்க்கான நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாளை வரை கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மழைநீர் புகுந்துள்ளது. மேலும், கனமழை நீடிக்கும் என்பதால் துபாய்க்கு வரவிருந்த 100க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் வறண்ட காலநிலை மற்றும் தீவிர கோடை வெப்ப அலைகளுக்கு பெயர் பெற்றவை.

இருப்பினும், பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக துபாயில் பல ஷாப்பிங் மால்கள் நீரில் மூழ்கியதை வைரல் வீடியோக்கள்  வெளியாகியுள்ளன.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...