வெளிநாட்டினரிடம் மோசடி மற்றும் அவர்களிடம் அநாகரிகமான நடத்தையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் குழுவினரை எச்சரிப்பதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார் .
“இந்த நபர்கள் வெளிநாட்டினருக்கு மரியாதை காட்டுவதில்லை. அவர்களின் நடவடிக்கைகள் நமது நாட்டின் நற்பெயருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன,
இதனை பொறுத்துக்கொள்ள முடியாது, நவீன கால சுற்றுலாப் பயணிகள் பலவிடயங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் அவர்களை எளிதில் தவறாக வழிநடத்த முடியாது என தெரிவித்துள்ள அவர் நட்புறவு மற்றும் விருந்தோம்பலுக்கு இலங்கையின் நற்பெயரைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“ஏப்ரல் மாதத்திற்குள் ஏறக்குறைய 700,000 வெளிநாட்டவர்கள் வருகை தந்துள்ளனர் . தற்போது சுற்றுலாத்துறை வளர்ச்சி கணிப்பிட்டு வருகிறது ஆனால் இதுபோன்ற செயல்கள் நமது நற்பெயருக்கு களங்கம் மற்றும் நமது பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிப்பதைத் தடுப்பது மிகவும் முக்கியமானது” என்று கமகே எச்சரித்தார்.
அண்மையில், களுத்துறை மற்றும் கொழும்பு அளுத்கட பகுதியில் சுற்றுலாப் பயணிகளை தரக்குறைவாக நடத்தும் இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது