சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

Date:

சுற்றுச்சூழல் குற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஏதும் இருப்பின் 1997 அல்லது 1981 என்ற அவசர தொலைபேசி இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சுற்றாடல் அழிவு தொடர்பிலான சுற்றிவளைப்புகளை மேற்கொள்வதற்கு பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் மிகவும் முக்கியமானவை என்பதால் பொலிஸ் மா அதிபரால் இந்த தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆறுகளின் கரையோரங்களில் சட்டவிரோத சுரங்கங்கள், தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வளி மாசுப்பாட்டால் வன விலங்குகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றாடல் பாதிப்பு தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்காக பொலிஸ் விசேட பணியகத்தின் 1997 அவசர இலக்கமும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் 1981 அவசர இலக்கமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

பெறுபேறுகளுக்குப் பின் உயர் கல்வி கனவா? ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில் புதிய மாணவர் அனுமதி!

இலங்கையின் முன்னணி இஸ்லாமிய உயர் கல்வி நிறுவனமான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தில்,...

60 ஆண்டுகளாக நீடித்த கூட்டணி: திமுகவிலிருந்து இருந்து விலகியது ஐயுஎம்எல்!

தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின்...

க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள்; 2.25 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி!

கடந்த 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின: யாழ். ஒஸ்மானியா கல்லூரி மாணவன் முஹம்மத் ஷிபாக் மாபெரும் வரலாற்றுச் சாதனை!

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது...