குறிப்பு: ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானினால் இந்த நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைப்பதற்காக அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இராஜாங்க மட்டத்திலும் அரசியல் மட்டத்திலும் அதேபோன்று முஸ்லிம் சமூக மட்டத்திலும் கூட வித்தியாசமான கருத்துக்கள் கலந்துரையாடல்கள் வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்று வருகின்றன.
ஈரான் ஜனாதிபதியின் இலங்கை பயணத்தை அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் உற்றுநோக்கியுள்ளன.
இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்தும் சக்தியாகவுள்ள அமெரிக்காவுக்கு ஈரான் ஜனாதிபதியின் விஜயம் குறித்து திருப்தியில்லையென இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.
இதேவேளை உலகின் பலம் வாய்ந்த ஷீஆ நாடான ஈரானின் தலைமை இலங்கைக்கு வருவது குறித்து முஸ்லிம்கள் மத்தியிலும் பல சலசலப்பான கருத்துக்ள் முன்வைக்கப்படுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அந்தவகையில் அதுதொடர்பாக வாசகர் ஒருவர் தன்னுடைய முகநூல் வாயிலாக எழுதியுள்ள ஒரு கருத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் 24ம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார் என்ற தகவல் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
ஈரானின் ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்வது இது முதற்தடவையல்ல.
அண்மைய நாட்களில் இலங்கையிலும், சுப்ரீம் தலைவர்களும், அமைப்புக்களும் உருவெடுத்திருப்பதானது வழிகெட்ட ஷீஆ கொள்கையின் தாக்கமோ என்று அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதை பலரும் நன்கறிவர்.
எனவே இப்ராஹிம் ரைசியின் விஜயத்திற்கு மதச்சாயமோ, ஆன்மிகச் சாயமோ பூசப்படாமல், இரு நாடுகளுக்கிடையிலான ராஜதந்திர, அரசியல் விவகாரமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும்.
நபித்தோழர்களையும், உம்மகாதுல் முஃமினீன்களையும் மிக மோசமான, கீழ்தரமான வார்த்தைகளைக் கொண்டு திட்டித்தீர்க்கும் வழிகெட்ட ஷீஆ அமைப்பினர் அன்மைய நாட்களில் ஈரான் அரசின் உதவியால் மத்ரஸாக்களும், ஈரானுக்கான சுற்றுலாக்களும், ஏன் பல்கலைக்கழகமொன்றையும் நிறுவி தங்களது வழிகெட்ட, தூய அகீதாவிற்கெதிரான பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருவதை அனைவரும் நன்கறிவோம்.
அஹ்லுல் பைத்களை (நபியவர்களின் குடும்ப உறவுகளை) மதிக்கின்றோம் என்ற பெயரில் நபியவர்களின் எல்லா உறவுகளையும் தூக்கியெறிந்துவிட்டு ஹுஸைன் ரழியல்லா அன்ஹு அவர்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதும், அவரது சகோதரர் ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை இரண்டாம் தரமாக பார்க்கப்படுவதன் பின்னணியையும் அறிந்தாக வேண்டும்.
கடந்த பல தசாப்தங்களாக இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து நீக்கிவிடுவோம் என்ற கர்ஜனையை ஈரான் கூறிவருவது ஒன்றும் புதிதல்ல.
சமய மற்றும் ஆன்மிக செயல்பாடுகளுக்கான வழிகாட்டல்களை வழங்குவதற்கு போதுமான அமைப்புக்கள், தெளிவான அகீதா என்பனவும் அதற்கான வழிகாட்டல்களும் எம்மிடம் தாரளமாக இருக்கின்றன.