நியூசிலாந்தில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம்

Date:

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் தீர்மானத்தின் படி, இலங்கைக்கான உயர்ஸ்தானிகராலயமொன்று நியூசிலாந்தின் வெலிங்டனில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஆராய்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டு சொத்துக்கள் முகாமைத்துவம் மற்றும் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் நாயகம்  பிரதீபா சேரம் தலைமையிலான குழுவொன்று ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நியூசிலாந்துக்கு விஜயம் செய்யவுள்ளது.

இலங்கையின் தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் தற்போது அங்கு தங்கியுள்ளதுடன், அவர்களுக்கு வசதிகளை வழங்குவதும் வர்த்தகம், கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இதன் முதன்மை நோக்கங்களாகும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

ஈரான் ஜனாதிபதி பலி: உலகம் பாதுகாப்பானதாக மாறும்; அமெரிக்க அதிகாரியின் சர்ச்சைக் கருத்து!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த...

பாடசாலைகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த நிலையில், முதலாம்...

ஹெலிக்கொப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் ஜானதிபதி இப்ராஹிம் ரைசி மரணம்: ஹெலிக்கொப்டரில் பயணித்த எல்லோரும் பலி!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு...

ஈரான் ஜனாதிபதி உயிருடன் இருப்பதற்கான அறிகுறி இல்லை’: அரச ஊடகம் தகவல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் மீண்டு...