கோட்டா தன்னை ஜனாதிபதியாக்கிக்கொள்ள ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தினார்: தொலைபேசி உரையாடலை வெளிப்படுத்திய பேராயர்

Date:

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை கைதுசெய்வதவற்கும், காட்டிக்கொடுப்பதற்கும், தயங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய விசாரணைகளை மேற்கொள்வதற்கு தடையாக இருந்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் ஆன்மக்கள் இளைப்பாற்றுக்கான பிரார்த்தனை மற்றும் ஐந்தாவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தில் இன்று கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் இடம்பெற்றபோதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இந்த மோசமான தாக்குதல் காரணமாக இலங்கையின் அரசியல் பயணத்தில் மாற்றங்களை கொண்டு வருவதற்கும், பொருளாதாரத்தில் முன்னேற்றமடையவதற்கும் இன்று வரை முடியாதுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் வீழ்ந்த எமது நாட்டின் பொருளாதாரம் இன்று வரை தலைதூக்க முடியாதுள்ளமையை, அந்த தாக்குதலின் தாக்கம் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு, விஜித் மலல்கொட தலைமையிலான ஒரு குழுவும், பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி ஆணைக்குழு என்பன அப்போது நியமிக்கப்பட்டது.

எனினும் குறித்த குழுவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் உண்மைகளை வெளிக்கொணரப்படவில்லை.

2019 நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் வெற்றிபெற்று ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ஷவினால் இது குறித்து ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பாரக்கப்பட்டது.

எனினும், தன்னை ஜனாதிபதியாக்கிக்கொள்ள அவர் இந்த சம்பவத்தை பயன்படுத்தினார்.

தேர்தலுக்கு பின், நீர்கொழும்பு மற்றும் ஜா-எலை நடத்தப்பட்ட இரு அரசியல் கூட்டங்களிலும் மற்றும் இலங்கை கத்தோலிக்க திருச்சபையினரையும் சந்தித்து கலந்துரையாடிய, கோட்டாபய, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து, கடுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையான சூத்திரதைாரிகள் வெளிக்கொணரப்பட்டு, தீர்வை பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

பின்னர், ஜனாதிபதி பதவியேற்ற அடுத்த நாளே என்னை தொலைபேசியூனாடாக அழைத்து “உயித்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்தான விசாரணைகளை முன்னெப்பதனால் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக” கூறினார்.

மேலும், தாக்குதலுடன் தொடர்புடைய அவரின் சிநேகிதர்களை கைதுசெய்வதவற்கும், காட்டிகொடுப்பதற்கும், தயங்கிய கோட்டாபய விசாரணைகளை மேற்கொள்வதற்கு தடையாக இருந்தமையும் எனக்கு நினைவில் உள்ளது.

தாக்குதல் குறித்து முன்னெடுகப்பட்ட முதல் விசாரணைகளின் ஒரு பிரதியை வழங்கிய கோட்டாபய ராஜபக்ஷ மற்ற பிரதிகளை வழங்க மறுத்தமை நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியில் இது குறித்து அக்கறையின்மையுடன் செயற்பட்டமையும், முறையான விசாரணைகளை முன்னெடுக்க தவறியமையையும், அவரது அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் 6 பேர் கொண்ட குழுவினரை விசாரணை நடத்த நியமித்தமை போன்றவை அவர் தேர்தலுக்கு முன் எமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியமை எடுத்துக்காட்டுகிறது.

மேலும், இத் தாக்குதல் குறித்து தொடர்ச்சியான விசாரணைகளை முன்னெடுத்து வந்த அதிகாரிகளை பதவியிலிருந்து நீக்கியமை, அக் குழுவின் தலைவரை சிறையில் அடைத்தமை மற்றும் மற்றொரு அதிகாரியை இடமாற்றம் செய்தமை, தனக்கு சிநேகப்பூர்வமான நபர்களை விசாரணைகளுக்காக நியமித்தமையும் என்பன, விசாரணைகளை சுக்குநூறாக்கினார்.

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து கோட்டாயவின் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட மந்தமான விசாரணைகள் எம் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனிடையே சுதந்திரமானதும், சுயாதீனமானதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, அருட்தந்தையர்கள் மற்றும் மதபோதகர்கள்  34 பேரின் கையெழுத்துடன் 2021 ஜுலை 12 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்துக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.

அந்த கடிதம் தனக்கு கிடைத்தது என்றவொரு பதில் கடிதம் கூட வரவில்லை.

மேலும், 2023 ஒக்டோம்பர் 23 ஆம் திகதி புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ஜனாதிபதி ரணில் விக்கமசிங்கவுக்கும் இது குறித்தான இரண்டாவது கடிதத்தை அனுப்பி வைத்தோம். அவரிமிருந்தும் எமக்கு எந்தவொரு பதில் கடிதமும் கிடைக்கவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து, நீதியான நியாமான விசாரணைகளை நடத்தப்படவேண்டும் என் நாம் எவ்வளவு வலியுத்தியும், இந்த அரசாங்கம் அதனை சிறிதளவேனும் கண்டுகொள்ளாமல் இருப்பது, இதற்கான தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பது எமக்கு தெளிவாக தெரிகிறது.

 

இந்த விடயத்தினை மூடி மறைக்க முயற்சிக்கும், இருந்த அரசாங்கமும் இருக்கின்ற அரசாங்கமும் தொடர்ச்சியாக ஆட்சி செய்தால், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்படைய சந்தேக நபர்களும், நிறுவனங்களும் பாதுகாக்கப்படுவார்கள் என்பது எமக்கு இருக்கிற மிகப் பெரிய சந்தேமாகும்.

இவர்களுக்கும் தாக்குதல் சம்பவத்துக்கு தொடர்பு இல்லை எனில், சத்தியத்தை வெளிப்படுத்த இவர்கள் தயங்கமாட்டார்கள்.

உயித்த ஞாயிறு தாக்குதலை முஸ்லிம் தீவரவாதிகள் நடத்தியுள்ளமை உண்மை. ஆனால், அவர்களுக்கு பின்னால் பலமான சக்தியொன்று இருப்பதற்கான சாட்சி இருக்கும் பட்சத்தில், அது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படாது, சாட்சிகளை புதைக்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது.

இவ்வாறான ஒரு தாக்குதல் நடக்கப்போகிறது என்பதை அறிந்தும் அதனை தடுப்பதற்கு எவ்வித முயற்சிகளையும் எடுக்காது இருந்த அரசியல் தலைவர்களுக்கு எதிராக நீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். என்றார்

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...