முஸ்லிம் உலகின் பிரபல சிந்தனையாளர் அல்லாமா அப்துல் மஜீத் பின் அஸீஸ் அல்-ஸிந்தானி அவர்கள் இன்று திங்கட்கிழமை (22) காலமானார்.
அல்குர்ஆனின் விஞ்ஞானம் தொடர்பான ஆய்வுத்துறையில் மிகப்பிரபலமான அறிஞராக கருதப்படுகின்ற இவர் அரசியல்வாதியாகவும் இஸ்லாமிய அழைப்பாளருமாக தனது வாழ்நாளை கழித்ததோடு, குறிப்பாக யெமன் நாட்டில் உள்நாட்டு யுத்தம் துவங்க முந்திய காலப் பகுதியில் உலகின் புகழ்பெற்ற “ஜாமியதுல் ஈமான் “என்ற பல்கலைக்கழகத்தை நிறுவிய நிறுவனராகவும் குர்ஆனிலும் ஹதீஸிலும் இருருக்கின்ற விஞ்ஞான புலமைகளுக்கான ஆய்வு மன்றத்தின் நிறுவனராகவும், யெமன் நாட்டினுடைய சமூக சீர்திருத்தத்திற்கான அரசியலமைப்பின் ஆலோசகர் குழுவின் உறுப்பினராகவும் செய்றபட்டு வந்தவர்.
அளப்பரிய சேவைகளை செய்து மறைந்த அவரை வல்ல அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக!