தன்பால் ஈர்ப்பு திருமணங்களை குற்றமாக்கிய ஈராக்

Date:

ஒரு பால் உறவுக்கு 10 தொடக்கம் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அதனை குற்றமாக்கும் சட்டமூலம் ஒன்று ஈராக் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் கீழ் பாலினத்தை மாற்றிக் கொண்டவர்களும் ஒன்று தொடக்கம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று ஓரினச் சேர்க்கை மற்றும் விபச்சாரத்தை ஊக்குவிப்பவர்களுக்கு குறைந்தது ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

இது நாட்டின் மதப் பெறுமானங்களை உறுதிப் படுத்துவதாக உள்ளது என்று இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது ஈராக்கிற்கு கறுப்புப் புள்ளியாக உள்ளது என்று உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன. கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்திற்கு மிகப்பெரிய கூட்டணியைக் கொண்டுள்ள பழைமைவாத ஷியா முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இதில் ஒருபாலுறவுக்கு மரண தண்டனை விதிக்க ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டபோதும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பை அடுத்து அதில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...