ஊடகவியலாளர் அசாம் அமீனை பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பு!

Date:

இலங்கையைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளர் அசாம் அமீனை, ஒப்பந்தம் காலம் நிறைவடைவதற்கு முன்னர் பணியில் இருந்து நிறுத்தியதற்காக பிபிசிக்கு எதிராக இலங்கை தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிபிசி, ஊடகவியலாளர்  அசாம் அமீனின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமை நியாயமற்றது என்று தொழிலாளர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது.

அதன்படி, இழப்பீடு வழங்கவும் பிபிசிக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாய்மூலத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி, அடுத்த வாரம் முழு உத்தரவை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அஸாம் அமீன் கலந்துரையாடிய குரல் பதிவு ஒன்றை சிங்க லே அமைப்பு வெளியிட்டிருந்த நிலையில் அப்போது அசாம் அமீன் 2020 ஆம் ஆண்டு பிபிசியில் இருந்து பதவி விலக்கப்பட்டிருந்தார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...