ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (30) அறிவிக்கப்படவுள்ளது.
சுத்தமான குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகளால் 2013 ஆம் ஆண்டு வெலிவேரி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே மேற்கொள்ளப்பட்டது.
இதில் மூன்று இளைஞர்கள் கொல்லப்பட்டதுடன், 45 பேர் கடுயாமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு இராணுவ அதிகாரிகள் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நீண்ட விசாரணைக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற போது ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவி வகித்ததுடன், பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி விகத்தமை குறிப்பிடத்தக்கது.