பலஸ்தீன விவகாரம்: தீர்வை முன்னிறுத்தி இலங்கை- எகிப்து நெருங்கி பணியாற்ற இணக்கம்!

Date:

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், எகிப்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சமே ஹௌக்ரிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது பலஸ்தீன விவகாரத்தில் இரு அரசுகள் எனும் தீர்வை முன்னிறுத்தி நெருங்கிப் பணியாற்றுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரப்பேரவையின் ஏற்பாட்டில் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் 28- 29 ஆம் திகதிகளில் நடைபெற்ற உலகளாவிய ஒத்துழைப்பு வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான வலுத்திறன் தொடர்பான விசேட கூட்டத்தில் இலங்கை சார்பில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ரியாத் சென்றுள்ளார்.

அங்கு உலக பொருளாதாரப்பேரவை யின் விசேட கூட்டத்தின் பக்சு நிகழ்வாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் ஃபைஸல் பின் ஃபர்ஹானை சந்தித்த அமைச்சர் அலி சப்ரி, இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்துக் கலந்துரையாடினார்.

அத்தோடு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவித்தல், திறன்மிக்க இலங்கை தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புக்களை வழங்கல் மற்றும் இருநாட்டு மக்களு க்கு இடையிலான தொடர்புகளை வலுப்ப டுத்தல் என்பன தொடர்பிலும் இரு அமைச் சர்களுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அதேபோன்று எகிப்து நாட்டின் வெளி விவகார அமைச்சர் சமே ஹௌக்ரியுட னான சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, இருதாப்பு வர்த்தகம் மற்றும் கலாசாரத்தொடர்புகள் என்பனவற்றை மேலும் விரிவுபடுத் திக்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு பலஸ்தீன விவகாரத்தில் இரு அரசுகள் எனும் தீர்வை முன்னிறுத்தி நெரு ங்கிப்பணியாற்றுவதற்கும் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...