விண்ணப்பிக்காத பாட விடயதானத்தை பெற்ற ஆயிரக்கணக்கான G.C.E (O/L) பரீட்சார்த்திகள் l நடந்தது என்ன?

Date:

கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவுள்ள 10 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு, தாம் விண்ணப்பிக்காத பாட விதானத்துடனான அனுமதி பத்திரம் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்துகின்றது.

இதனால், மாணவர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிடுகின்றார்.

எனினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசூரிய தெரிவிக்கின்றார்.

2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை, எதிர்வரும் 06ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த பரீட்சைக்காக 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதுடன், அவர்களில் 65,331 பரீட்சார்த்திகள் இரண்டாவது தடவையாக பரீட்சையை எதிர்கொள்ளும் தனியார் பரீட்சார்த்திகளாவார்.

இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதுடன், இது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிடுகிறார்.

குறித்த பரீட்சை விடயதானத்திற்கு சமூகமளிக்காத பரீட்சார்த்திகளில் பெறுபேறுகளில் சமூகமளிக்காதவர் என சுட்டிக்காட்டப்படாது எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Popular

More like this
Related

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘தெமட்டகொட சமிந்த’விடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி!

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான கணேமுல்ல சஞ்சீவ கொல்லப்பட்ட சம்பவம்...

கொவிட் காலத்தில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞருக்கு இலவச ஹஜ் வாய்ப்பு.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணிகளில் தன்னார்வமாக...

சவூதி அரேபியா சென்றடைந்த இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரீகர்கள் குழு: தூதுவர் அமீர் அஜ்வத் வரவேற்பு.

2026-ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட 325...