1.3 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிப்பு: எரிசக்தி அமைச்சர்

Date:

2022 – 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மின்சாரக் கட்டணங்கள் தாமதமாக செலுத்தப்பட்டதன் காரணமாக கிட்டத்தட்ட 30 மில்லியன் சிவப்பு பில்கள் வழங்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் 1.3 மில்லியன் பாவனையாளர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

126,000 இற்கும் அதிகமான கணக்குகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், கிட்டத்தட்ட 1.9 மில்லியன் புதிய மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது 7.2 மில்லியனுக்கும் அதிகமான மின்சார பாவனையாளர்கள் இருப்பதாக அமைச்சர் விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Popular

More like this
Related

தேசிய பாதுகாப்பை மீள் உறுதி செய்தலில் நீதித்துறையின் வகிபாகம்.

நேற்றைய தொடர்ச்சி... பகுதி-02 குடும்பக் கட்டமைப்புகள் பல தலைமுறைகளைக் கொண்டதாகவும் சமூக அடிப்படையிலானதாகவும் இருந்தன. மத...

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...