ரஃபாவில் மக்கள் வசிக்கும் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினால் இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துவேன்: பைடன்

Date:

இஸ்ரேல்  காசா நகரமான ரஃபாமீது பாரிய தாக்குதலை மேற்கொண்டால்  இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம்  என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார்.

CNN ஊடகத்துக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்று ரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை என பைடன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பாகயிருப்பதை தொடர்ந்தும் உறுதிசெய்வேன் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஆட்டிலறி எறிகணைகளையும் ஆயுதங்களையும் இஸ்ரேலிற்கு வழங்கமாட்டோம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

தற்போது ரபாவில் காணப்படும் நிலையை  தரைநடவடிக்கை என அமெரிக்கா தெரிவிக்காது இஸ்ரேலிய படையினர் இன்னமும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிற்குள் செல்லவில்லை என  தெரிவித்துள்ள பைடன் இஸ்ரேலிய படையினர் எல்லையில்தான் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்தால் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என இஸ்ரேலிய பிரதமருக்கு தெளிவாக தெரிவித்துள்ளேன் எனவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

ஹமாஸை நிர்மூலமாக்கும் நோக்கில் ஏழு மாதங்களாக நடத்தப்பட்ட தாக்குதலில் காசா மக்களை இஸ்ரேலுக்கு வழங்கிய அமெரிக்காவின் குண்டுகள் கொல்லப்பட்டதாக பைடன் ஒப்புக்கொண்டதுடன் மத்திய கிழக்கில் இருந்து வரும் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்இ இஸ்ரேலுக்கு தற்காப்பு ஆயுதங்களை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். .

செவ்வாயன்று எகிப்துடனான ரஃபா எல்லை வழியாக நகர்ந்த பிறகுஇ இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெற்கு காசாவில் தொட்டி மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்தனஇ முக்கிய உதவிப் பாதையைத் துண்டித்தன.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...