அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட கிளையின் கீழிருக்கின்ற புத்தளம் நகரக் கிளைக்கான புதிய நிர்வாகக்குழு தெரிவு உலமா சபையின் வழிகாட்டலின் கீழ் தற்போது புத்தளம் பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த தெரிவில் புதிய தலைவராக அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரோடு சேர்த்து 15 பேர்கொண்ட நிர்வாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நகரக்கிளை தலைவராக புத்தளம் இஸ்லாஹியா அரபுக்கல்லுரியின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி) பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.