பாகிஸ்தான் அரசின் உயர்கல்வி ஆணைக்குழுவினால் வருடாந்தம் வழங்கப்படும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் 2024 சம்பந்தமான அறிமுகமும் கண்காட்சியும் இன்று 15 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பஹீமுல் அஸீஸ் அவர்கள் இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இப்புலமைப்பரிசிலானது பாகிஸ்தானின் தலைசிறந்த கவிஞரும் தத்துவஞானியுமாக திகழ்ந்த அல்லாமா முஹம்மது இக்பாலின் பெயரில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படுகிறது. இப்புலமைப்பரிசில் திட்டமானது 2019இல் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து இனத்தவர்களும் பாலினம் மற்றும் சமய வேறுபாடின்றி நியாயமான முறையில் இப்புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்படுவதோடு பல நூற்றுக் கணக்கான இலங்கை மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உட்பட பல் வேறு துறைகளில் உயர் கல்வியை தொடர்கின்றனர்.
இவ்வைபவத்தில் இலங்கைக்கான பாகி்ஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் பஹீமுல் அஜீஸ், பாகிஸ்தான் உயர் கல்வி கழகத்தின் திட்ட பணிப்பாளர் திரு.ஜஹான்ஸிப் கான் உட்பட பலர் பாகிஸ்தான் வழங்கும் புலமைப் பரிசிலின் முக்கியத்துவம் குறித்து கருத்துரைகள் வழங்கினர்.