க.பொ.த (சா/த) பரீட்சை முடிந்து செவ்வாய்க்கிழமை (14) நாவலப்பிட்டியில் காணாமல் போன இரண்டு மாணவிகளும் கடுவெலயில் உள்ள அவர்களது உறவினர்கள் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குறித்த சிறுமிகள் கொழும்பு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவிகள் இருவரும் கடந்த 15ஆம் திகதி இரவு கடுவளையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளனர்.
கினிகத்ஹேனவில் உள்ள பரீட்சை நிலையத்தில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிந்து இம்மாணவிகள் வீடு திரும்பாத நிலையில் பெற்றோர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.