இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மேனாக டபிள்யூ.ஏ.சூலானந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் நிர்வாக சேவைகளில் சிறப்பு தரத்தில் சிறந்த அதிகாரியாக கடமையாற்றிய அவர், இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் மற்றும் 2382/32 வர்த்தமானி ஒழுங்குமுறைகளின் அடிப்படையில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் இந்த நியமனம் வழங்கப்பட்டது.
தேசிய விளையாட்டு சம்மேளனத்தின் தீர்மானத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் சுயாதீன மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.