நாடாளுமன்றம் கலைக்கப்படுவது குறித்து வெளியாகும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடு நல்லதொரு நிலைமைக்கு வந்தவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.