பெரு நாட்டில் மாற்று பாலினத்தவரை ‘மனநோயாளிகள்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக போராடி வருகிறார்கள்.
இப்படி இருக்கையில், அரசே அதிகாரப்பூர்வமாக மாற்றுப்பாலினத்தவர்களை அங்கீகரிப்பதற்கு பதில், அவர்களை மனநோயாளிகள் என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டின் மாற்று பாலினத்தவர்களை அங்கீகரிப்பது குறித்து பல்வேறு விவாதங்கள் நீண்ட காலமாக எழுந்து வருகிறது.
இப்படி இருக்கையில், சமீபத்தில் ஒரு அரசாணையில் அந்நாட்டு அதிபர் தினா பலுவரேட் கையொப்பமிட்டுள்ளார்.
மாற்றுப்பாலினத்தவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கான மருத்துவ உதவியை இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சர்வதேச நோய்களின் பட்டியலிலிருந்து மாற்றுப்பாலின சிக்கல்களை உலக சுகாதார அமைப்பு நீக்கி இந்த ஆண்டுடன் 34 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதனையடுத்து தற்போது இந்த முடிவை பெரு அரசு அறிவித்திருக்கிறது. இந்த உத்தரவு LGBTQ மக்களிடம் அதிருப்தியை உருவாக்கும் என்றும், ஆனால் அவர்கள் மாற்று சிகிச்சை எதற்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் அரசு கூறியுள்ளது.
அரசு தரப்பில் என்னதான் சமாதானம் சொன்னாலும், பெரு நாட்டில் பல்வேறு அமைப்பினர்கள் அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
அரசின் இந்த முடிவை எதிர்த்து போராட்டங்களை நடத்த இருப்பதாகவும், அரசின் முடிவுகள் திரும்பப் பெறப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.