வெசாக் தின தன்சல்களில் கூடுதல் பரிசோதனைகள்

Date:

வெசாக் தினத்தை முன்னிட்டு தன்சல்களில் வழங்கப்படும் உணவுகள் உண்பதற்குத் தகுதியற்றதாக இருப்பின், உடனடியாக அருகில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அல்லது பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

வெசாக் காலத்தில் நடத்தப்படும் தன்சல்கள் பொது சுகாதார பரிசோதகரால் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.

அப்படி இருந்தும் சில தன்சல்கள் உரிய தரத்தில் பராமரிக்கப்படுவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த வருடத்தை விட இவ்வருடம் கூடுதலான தன்சல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தன்சல்கள் நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், தன்சல்களை நடத்த விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்து கொள்ளுமாறும் சங்கம் தெரிவிக்கிறது.

பதிவு செய்யும் போது, ​​பொது சுகாதார பரிசோதகர்கள், தன்சல்களை வழங்குவதில் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...