ஈரான் தூதுவரை தாக்கிய கொழும்பு வர்த்தகருக்கு மறியல் !

Date:

ஈரானிய தூதுவர்  ஏ.டெல்கோஷை தாக்கி விபத்திற்குள்ளாக்கிய கொழும்பு வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 02, முத்தையா வீதி பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றின் வாகன நிறுத்துமிடத்திற்குள் தூதுவர் பிரவேசித்த போது, மற்றொரு காரின் சாரதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது குறித்த நபர் தூதுவரைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்குப் பிரவேசித்த பொலிஸார், கொழும்பு 07, வோட் பிளேஸில் வசிக்கும் 33  வயதுடைய வர்த்தகரைக்  கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர், கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளை  (20) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் சிக்கிய தூதுவருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...

மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும்...

போதைக்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன் புனர்வாழ்வு பெற நடவடிக்கை

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது விருப்பத்துடன், புனர்வாழ்வு பெறக்கூடிய பத்து மையங்கள்...

கட்டுநாயக்க விமான நிலைய Check-in நேரத்தில் மாற்றம்

இன்று (17) நண்பகல் 12.00 மணி முதல் அமுலாகும் வகையில் கட்டுநாயக்க...