ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்பு: இலங்கை விஜயத்தை நினைவுகூர்ந்த ஜனாதிபதி ரணில்

Date:

 விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் உடல்களை ஈரானிய மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய சிரேஷ்ட ஈரானிய அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை இட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசுக்கும், ஈரான் மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் எச். அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது உத்தியோகபூர்வ ஏக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரான் – இலங்கை இடையிலான விஜயங்கள், இருதரப்பு சந்திப்புகள் மற்றும் இப்ராஹிம் ரைசியின் அண்மைய இலங்கை விஜயம் தொடர்பிலும் இந்தப் பதிவில் நினைவுகூர்ந்துள்ளார்.

மேலும், அவர்களின் குடும்பத்தாருக்கு அனுதாபங்கள் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்களுடன் இலங்கை இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...