ஈரான் ஜனாதிபதியின் மறைவு பேரதிர்ச்சி: மஹிந்த இரங்கல்

Date:

ஈரான் நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ  இன்று திங்கட்கிழமை (20) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவை கேள்வியுற்று இலங்கையில் உள்ள ஈரானிய தூதரகத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் சந்தித்து இரங்கலை தெரிவித்ததோடு, இரங்கல் புத்தகத்தில் குறிப்பொன்றையும் பதிவிட்டுள்ளார்.

ஹெலிக்கொப்டர் கோர விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும்  அவருடன் சென்ற பல மூத்த  அதிகாரிகள் உயிரிழந்தமை ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரைசி இலங்கையின் உண்மையான நண்பராக இருந்தார். ஈரான் மக்கள் மீது அவர் கொண்ட தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் என்றும் நினைவுகூரப்படும்  என எக்ஸ் தளத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

ஜனாதிபதி நிதியம்- ஜனசக்தி அறக்கட்டளை இடையே விசேட புரிந்துணர்வு ஒப்பந்தம்!

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குக் கிடைக்கும் சுகாதார வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி...

வித்யா கொலை வழக்கு; குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2015-ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

சிறுவர்களின் டிஜிட்டல் பாதுகாப்பை உறுதி செய்யப் புதிய கொள்கை!

சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும்...

தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு: காங்கிரஸ் விதித்த நிபந்தனை!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவளித்துள்ள காங்கிரஸ், அக்கட்சிக்கு ஒரேவொரு...