‘ஈரான் ஜனாதிபதி  மரணத்துக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை’: இஸ்ரேல் திட்டவட்டம்

Date:

ஈரான் ஜனாதிபதி  மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை; தாங்கள் காரணமும் அல்ல என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி  இப்ராஹிம் ரைசி, அசர்பைஜான் எல்லையில் அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

பல மணிநேர நீண்ட தேடுதலின் பின்னர் துருக்கியின் டிரோன்கள், ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை உறுதி செய்தது. அத்துடன் ரைசி உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஈரான் ஜனாதிபதி  ரைசியின் மரணம் உலக நாடுகளை உலுக்கி இருக்கிறது. இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் அதிதீவிரமாகி, இஸ்ரேல்- ஈரான் யுத்தமாக உருமாறிக் கொண்டிருக்கிறது.

இதுவே 3-வது உலகப் போர் உருவாகவும் காரணமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில் ஈரான் ஜனாதிபதி  ரைசியின் மரணத்துக்கு இஸ்ரேல்தான் காரணம் இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் ரைசியை படுகொலை செய்துவிட்டதாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசி ஹெலிகாப்டர் விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல; இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஆனாலும் உலக நாடுகள் இஸ்ரேல் மீதான சந்தேகப் பார்வையை விலக்க முடியாத நிலைமைதான் உள்ளது.

கடந்த மாதம்தான் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் ஈரானின் தூதரகம் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தி இராணுவ தளபதி உள்ளிட்ட 13 வீரர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது.

இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில் ரைசியின் மரணம் நிகழ்ந்திருப்பதால் இஸ்ரேல் பக்கமே அனைத்து நாடுகளும் சந்தேகத்தை திருப்பிக் கொண்டிருக்கின்றன.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...