சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் (செவ்வாய்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.
இதேவேளை புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றும் விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது
மேலும் புத்தளம் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாட்டின் பல பகுதகிள் 150 மில்லி மீற்றலுக்கும் அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஊடாக இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீடித்த சீரற்ற காலநிலையால், புத்தளம் மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமேல் ஆளுநர் அலுவலம் தெரிவித்துள்ளது.