சீரற்ற வானிலை : பாடசாலைகள் குறித்த அறிவிப்பு!

Date:

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புத்தளம் மாவட்டமே இதுவரை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் 20, 21 ஆம் திகதிகள் மூடப்பட்டிருந்த போதிலும் நாளை 22 ஆம் திகதி வழமை போன்று மீண்டும் திறக்கப்படும் என பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

பேரிடர் பகுதிகளில் பாடசாலைகள் திறக்கப்படுமா? இல்லை? என்பதை பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளைய தினம் நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...