ஞானசார தேரரை பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்: பொதுமன்னிப்பு வழங்குமாறு இந்து சம்மேளனம் கோரிக்கை!

Date:

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள வணக்கத்துக்குரிய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் ஒன்றின் மூலம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரை பலர் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர் எனவும்  தேரரின் ஜனநாயகக் குரலை முடக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் சில ஜனநாயக அமைப்புகளால் அறியப்பட்ட மற்றும் அறியப்படாத கூறுகளால் அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளனர் எனவும்  அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், ஞானசார தேரர் முன்னெடுத்துள்ள சேவைகளையும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பட்டிலிட்டுள்ளனர்.

அந்தந்த மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் சமாதானத்தை நிலைநாட்டவும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் ஆன்மீகத் தளங்களை அழிக்கக்கூடிய முரண்பாடுகளை இல்லாதொழிக்கவும் ஞானசார தேரர் பாடுபட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஞானசார தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்திருந்தது.

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கூரகல பள்ளிவாசல் தொடர்பில் ஞானசார தேரர் தெரிவித்த கருத்து தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவித்ததாக தெரிவித்து இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...