நாடு முழுவதிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிக்கின்றது.
நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையையும் மேலும் தொடரக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்..
இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில்,
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், வட மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களின் சில இடங்களிலும் சுமார் 150 மில்லிமீற்றர் வரையிலான மிகப் பலத்த மழை பெய்யக்கூடும்.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.