சீரற்ற காலநிலையால் புத்தளம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தள நகர கிளையின் ஊடாக மூன்றாவது நாளாக  1250 குடும்பங்களுக்கு தேவையான பகல் போசணம் மற்றும் இரவு போசணம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
அதற்கமைய அக்ஸா மஸ்ஜித் (இல்லியாஸ் வத்தை) அல் அமீன் மஸ்ஜித் (இருவது வீடு) குபா மஸ்ஜித் (குபா பகுதி) வாஹித் மஸ்ஜித் தாரிக் மஸ்ஜித் பலாஹ் மஸ்ஜித் (கடையாகுளம்) அஷ்ரப்பிய்யா மஸ்ஜித் (கடையாகுளம்) ஹஸனாத் மஸ்ஜித் நபீஸா மஸ்ஜித் (குவைத் வைத்தியசாலை பகுதி ) மணத்தீவு பகுதி வாழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இவ்வாறு உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
அனைத்து உலமாக்களும் ஒவ்வொரு வீடாக சென்று உணவு பொதிகளை கொடுத்துடன்  கண்ணியமான மஸ்ஜித் நிர்வாகத்தில் உள்ளவர்கள், சமூக சேவையாளர்கள் மூலமாக அந்த அந்த இடங்களுக்கு உணவு பொதிகள் விநியோகம் செய்வதற்கு மிகவும் உதவி செய்தவர்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
