புகாரி தக்கியா ஷேகு நாயகத்தின் தாயார் மறைவுக்கு இஸ்லாமிய ஐக்கிய பேரவை அனுதாபம்!

Date:

காதிரிய்யத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவரும் பேருவளை மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் புகாரி தக்கியாவின் ஷேகு நாயகம் சங்கைக்குரிய அஷ்ஷெய்க் அஹம்மத் ஆலிம் பின் அஷ்ஷெய்க் முஹம்மத் ஆலிம் (காதிரியத்துன் நபவிய்யா ) அவர்களின் தாயார் கடந்த 19ஆம் திகதி காலமானதையிட்டு இஸ்லாமிய ஐக்கிய பேரவை தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.

காதிரியத்துன் நபவிய்யா தரீக்காவின் ஆன்மீகத் தலைவராக இருந்து இறையடி சேர்ந்த மர்ஹூம் அஷ்ஷெய்க் முஹம்மத் ஆலிம் பின் அஷ்ஷெய்க் அப்துஸ் ஸமிஹ் ஆலிம் காதிரிய்யத்துன் நபவிய்யா (ரஹ்) அவர்களின் பாரியாராக இருந்து இவரது ஆன்மீகப் பணிகள் சிறப்பாக நடைபெறுவதற்கு மிகவும் உறுதுனையாக இருந்த ஓர் உத்தமியாவார்.

சங்கைக்குரிய பேருவளை புகாரி தரீக்காவின் ஷேகு நாயகம் அவர்களை இந்த உலகுக்கு ஈன்றெடுத்த இந்த தாயாரின் மறுமை வாழ்வு சிறப்பாக அமைய வேண்டும் எனவும் அல்லாஹுத்தஆலா அன்னாரை பொருந்திக்கொள்ள வேண்டும் எனவும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஷபாஅத்தைப் பெற்று ஜன்னத்துல் பிர்தௌஸை அடைய வேண்டும் எனவும் இஸ்லாமிய ஐக்கிய பேரவை பிரார்த்திக்கிறது.

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...