ரவி கருணாநாயக்கவின் வழக்குக்கு மேல்முறையீடு!

Date:

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான உயர்மட்ட இலஞ்ச வழக்கில் மேல்முறையீடு செய்ய உயர் நீதிமன்றம் இன்று விசேட அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த வழக்கு, ரவி கருணாநாயக்க, நிறுவனமொன்றின் பணிப்பாளரான அர்ஜுன் அலோசியஸிடம் இருந்து அடுக்குமாடி குடியிருப்பை ஏற்றுக்கொண்டார் என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு (CIABOC)மூலம் மேல்முறையீடு செய்வதற்கான சிறப்பு அனுமதி விண்ணப்பத்தை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் மேற்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்படி ஆணைக்குழு எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனையை நிராகரித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மீள்பரிசீலனை செய்ய விண்ணப்பம் கோரியது.

உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய குற்றம் சாட்டப்பட்ட ரவி கருணாநாயக்கவுக்கு உரிமை இல்லை என ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச சட்டத்தின் கீழ் கருணாநாயக்கவை ‘பொது ஊழியராக’ கருத முடியாது என கருணாநாயக்கவின் தரப்பு வாதிட்ட போதிலும், உயர் நீதிமன்றத்தில் சட்ட மோதல்கள் ஆரம்பமாகின.

அவர்கள் அரசியலமைப்பின் 170ஆவது பிரிவை சுட்டிக்காட்டினர், இது அமைச்சர்களை ‘பொது அதிகாரி’ என்ற வரையறையிலிருந்து விலக்குகிறது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த வாதத்தை நிராகரித்த உயர் நீதிமன்றம், முன்னாள் நிதியமைச்சர் ஒரு ‘பொது ஊழியர்’ என்ற வரம்பிற்குள் வருவார், எனவே இலஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...