இவ்வருட சிங்கள, தமிழ், முஸ்லிம் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு உறுப்பினர்கள் மற்றும் மதத் தலைவர்களால் புத்தளம் அலோகா பெண்கள் சிறுவர் இல்லத்திற்கு இன்று உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதேநேரம் சிறுவர்களுக்கு தேவையான ஆடைகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இல்லத்தில் உள்ள 75 சிறுமிகளுக்கும், புத்தளம் சர்வமதக் குழு உறுப்பினர்களான புத்தியகம சந்தரதன தேரர், அருட்தந்தை யோஹான் ஜெயராஜ், முஸம்மில் ஹாஜியார் மற்றும் ஏனைய உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள்….!