ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் 35 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதற்கு பெரும்பாலான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக ‘ALL EYES ON RAFAH’ என ஸ்டோரி வைத்து, சிறிது நேரத்தில் அதனை பதிவை நீக்கியுள்ளார்.
தற்போது அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.