பலஸ்தீனம் தனி அரசாக அங்கீகரிக்கப்படும்: பிரான்ஸ் ஜனாதிபதி

Date:

பலஸ்தீனத்தை ஒரு அரசாக அங்கீகரிப்பதில் பிரான்ஸ்க்கு எந்தத் தடையும் இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியில் சான்சிலர் ஒலாப் சோல்ஸ் சகிதம் செய்தியாளர் மாநாட்டில் காசா குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

”பலஸ்தீனத்துக்கான அங்கீகாரம் சரியான தருணத்தில் கொடுக்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். உணர்ச்சி வசப்பட்டு இந்த முடிவை எடுப்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்” என்றும் கூறியுள்ளார்.

அயர்லாந்து, நோர்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பலஸ்தீனத்தை தனியரசாக உத்தியோகப்பூர்வமாக அங்கீகரித்த நாளில் ஜனாதிபதி மக்ரோன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் ரபாவில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்ட போது, “ரஃபாவின் காட்சிகளைக் கண்டு நானும் மிகவும் வருத்தமடைகிறேன். இதற்கான பதில் நடவடிக்கை அரசியல் ரீதியானதாக இருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் பலஸ்தீன காசா நிலவரம் நாடாளுமன்ற கீழ்ச் சபையாகிய தேசிய சட்ட மன்றத்தில் பெரும் குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவாதங்களுக்கு இடையில் தீவிர இடதுசாரி கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் திடீரென எழுந்து நின்று பலஸ்தீனக் கொடியைக் காட்டினார். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

கொடியை தூக்கிப் பிடித்த அமைச்சரை தேசிய சட்ட மன்றத்தின் உள் விதிகளுக்கு அமைய 15 நாட்களுக்கு சபையில் இருந்து இடை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் இரண்டு மாதங்களுக்கு நாடாளுமன்ற சம்பளத் தொகையில் பாதியை இழக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உலக அமைதி தினம்: உலக பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் சவூதி அரேபியாவின் முயற்சிகள்

எழுத்து: கலித் ஹமூத் அல்-கஹ்தானி இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அமைதி மதிப்புகளுக்கான...

‘உலக மக்கள் காசா பக்கம் நிற்கும் வரை இஸ்ரேல்-அமெரிக்காவின் சதி நிறைவேறாது”: இஸ்ரேலுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற பேரணி!

சென்னையில் காசாவில் நிலவும் போரினை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, பெரியாரிய உணர்வாளர்கள்...

2025(2026)சாதாரண பரீட்சைக்கான ONLINE விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

2025(2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரணதர பரீட்சைககு தோற்றுவதற்கான நிகழ்நிலை விண்ணப்பங்கள்...

இலங்கையில் அதிகரித்துள்ள இணையவழி துஷ்பிரயோகம்!

2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும்...