Stop Gaza Genocide: தெவட்டகஹ பள்ளிவாசல் முன்னால் நாளை ஆர்ப்பாட்டம்

Date:

காசா இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறும்,  நிரந்தர போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் நாளை (31) நண்பகல் 1 மணிக்கு கொழும்பு-7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கம், சிவில் அமைப்பு மற்றும் சோசலிச மற்றும் இளைஞர் சங்கம் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது.

இதில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...