ஈரானில் ஜனாதிபதி தேர்தல்: பதிவு செய்ய விரும்பும் வேட்பாளர்களுக்கு காலவகாசம்

Date:

ஈரானில் அடுத்த மாதம் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பதிவு செய்து கொள்வதற்கு ஐந்து நாட்கள் காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் கடந்த 19 ஆம் திகதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.

அரசியலமைப்பின் 131 ஆவது பிரிவின்படி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை இடைக்கால ஜனாதிபதியே நியமிக்கப்பட வேண்டும் என்ற பின்னணியில் முதல் துணை ஜனாதிபதியாக பணிபுரியும் முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டும். இந்நிலையில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் பதிவு செய்து கொள்வதற்கு ஐந்து நாள் காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 40 முதல் 75 வயதுக்கு இடைப்பட்டவர்கள் குறைந்தபட்சம் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் வேட்பாளர்களாகப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...