இவ்வருடம் சாதாரண தரப் பரீட்சை எழுதிய புத்தளம் மாணவன் மின்சார தாக்குதலில் பலி!

Date:

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையில் இருந்து இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவன் சலீம் மொஹமட் சஹ்ரான் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி புத்தளம் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (30) காலை உயிரிழந்தார்.

புத்தளம் ஐந்தாம் குறுக்குத் தெருவில் வசித்து வந்த இம்மாணவர் 2024 இற்கான க.பொ.த. சாதாரண தரம் பரீட்சையை கடந்த மாதம் நிறைவு செய்திருந்தார்.

கடந்த வாரம் தனது வீட்டில் குளித்து விட்டு முடி உலர்த்தி மூலம் முடியை உலர வைத்த சந்தர்ப்பத்திலேயே இவர் மின்சார தாக்குதலுக்குள்ளாகி புத்தளம் தள வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவரது மரண விசாரணைகளை மேற்கொண்ட புத்தளம் மற்றும் கல்பிட்டி பிரதேசத்துக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம், மின்சாரம் தாக்குதலினால் ஏற்பட்ட மரணம் என தீர்ப்பளித்து ஜனாஸாவை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

இவரது வியாழக்கிழமை  இரவு புத்தளம் பகா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

(புத்தளம் எம்.யூ.எம் சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...