புத்தளத்தில் மார்க்க விடயங்களை கவனத்தில் கொண்டு முதல் கட்டமாக அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் பிறை செயற்பாட்டு குழு பிறை சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
06 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.00 முதல் 6.00 வரை இடம்பெறும் இந்நிகழ்வில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறை குழுவின் உதவி செயலாளர் அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் (ஹிலாலி )அவர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
இந்நிகழ்வின் பலன்களை அடைந்துக் கொள்வதற்கும் பெறுமதி வாய்ந்த இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.