இன்று வெள்ளிக்கிழமை துல் ஹிஜ்ஜா மாதத்துக்கான தலைப்பிறை நேற்று 6ஆம் திகதி தென்பட்டுள்ளதால் துல் ஹிஜ்ஜாவை வெள்ளிக்கிழமையிலிருந்து ஆரம்பிப்பதாக சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் துல் ஹஜ் 8ஆம் நாளாகிய ஜுன்14 ஆம் திகதி ஹஜ் கிரியைகள் ஆரம்பித்து ஜுன் 18 ஆம் திகதி முடிவடையும். ஹஜ்ஜின் முக்கிய நிகழ்வான அரபா தினம் ஜுன் 15ஆம் திகதி சனிக்கிழமையாகும்.
மேலும் ஹஜ்ஜாஜிகள் அல்லாத ஏனையவர்கள் ஜுன் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹஜ் பெருநாளை கொண்டாடுவதாகவும் சவூதி அரேபியா உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் இன்று மாலை துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும்