ஐ.நா. புகலிடம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 40க்கும் மேற்பட்டவர்கள் பலி; கலங்கி போன காசா

Date:

240 நாட்களை கடந்து இஸ்ரேல் – காஸாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் தொடர்ந்து வருகிறது.

இதில் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரிதும் அதிர்ச்சியை அளித்து வருகிறது.

இஸ்ரேல், காசா என இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் பலஸ்தீனிய மக்களின் நிலை தான் மிகவும் மோசம்.

காசாவில் கடைசி நம்பிக்கையாக இருந்த ரஃபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த முகாமில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கியிருந்ததாக கூறி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆனால் இஸ்ரேலின் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட அப்பாவி பலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி இஸ்ரேல் ராணுவத் தரப்பினர் கூறுகையில், உளவுத்துறை மூலம் எங்களுக்கு தகவல் கிடைத்தது.

அந்த பள்ளியில் ஹமாஸ் அமைப்பினர் பலரும் மறைந்திருந்தனர். இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களையும் ஆய்வு செய்தோம். எனவே தான் தாக்குதலை தொடுத்தோம் என்று தெரிவித்தனர்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரணம் மற்றும் வேலை சார் ஏஜென்சி (UNRWA) தலைவர் பிலிப்பீ லஸ்ஸாரினி கூறுகையில், அந்த பள்ளி ஐ.நா சபையின் பலஸ்தீனிய அகதிகள் ஏஜென்சியால் நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேல் போரால் இடம்பெயர்ந்த சுமார் 6 ஆயிரம் பேர் இந்த முகாமில் தான் தஞ்சமடைந்திருந்தனர்.

உள்ளே ஹமாஸ் அமைப்பினர் இருந்தார்களா என்று தெரியவில்லை. அதேசமயம் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் படி, ஐ.நா கட்டடங்களை இராணுவ நடவடிக்கைகளுக்காக தாக்குவது அல்லது குறிவைப்பது, பயன்படுத்துவது தவறானது என்று தெரிவித்தார். 

Popular

More like this
Related

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...

2026 வரவு – செலவுத்திட்டம்: : ஜனாதிபதி உரையின் முக்கிய விடயங்கள்; கிராமப்புற வறுமையை ஒழிக்க ஒரு புதிய வளர்ச்சித் திட்டம்.

ஒரு வளமான மற்றும் அழகான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரின் ஆதரவையும் நாங்கள்...

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் பணிநீக்கம்!

சுமார் 20 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட...

2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி...