பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்கேற்பு!

Date:

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நாளை (செவ்வாய்கிழமை) ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் ரஷ்யாவுக்கு செல்லவுள்ளார்.

Indian Ocean Rim Association அமைச்சர்கள் குழுவின் தற்போதைய தலைவர் என்ற ரீதியில், அவர் அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

“நியாயமான உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ், ரஷ்யா இம்மாநாட்டை நடத்தவுள்ளது

மேலும் வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த குழுவினருடன், இருதரப்பு சந்திப்புகளை நடத்துவாரென்றும் எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...