காசா குழந்தைகளுக்காக கொழும்பு மஸ்ஜித் கூட்டமைப்பால் சேகரிக்கப்பட்ட நிவாரண நிதி கையளிப்பு!

Date:

காசா மோதல்களில் பாதிக்கப்பட்ட பலஸ்தீன் குழந்தைகளுக்கு உதவும் நோக்கில், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பால் சேகரிக்கப்பட்ட நிதி ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

182 பள்ளிவாசல்களைக் கொண்ட  மஸ்ஜித் கூட்டமைப்பு கொழும்பு மக்களுக்கு சமூக, பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. இயற்கை பேரிடர்கள் ஏற்படும் போது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதில் முன்னிற்கிறது.

அந்தவகையில் கொழும்பு மாவட்ட மஸ்ஜித் கூட்டமைப்பின் கீழ் இயங்கும் 12 மண்டலக் கூட்டமைப்புகளும் இணைந்து பலஸ்தீன் குழந்தைகளுக்காக ரூ.27,268,592/- நிதி திரட்டியுள்ளன.

திரட்டப்பட்ட நிதி விவரங்கள்:
(1) தெஹிவலை-மவுண்ட் லவினியா ரூ.9,012,640/-
(2) கிருலப்பன- ரூ.1,000,000/-
(3) பெட்டா (மத்திய) – ரூ.1,325,000/-
(4) அளுத்கட – ரூ.1,014,337/-
(5) மருதானை- ரூ.1,246,510/-
(6) தெமட்டகொட – ரூ.660,800/-
(7) கொலன்னாவ பிரிவு – ரூ.2,527,475/-
(8) கொழும்பு வடக்கு – ரூ.2,044,000/-
(9) கிராண்ட்பாஸ் – ரூ.1,519,440/-
(10) கொம்பனித் தெரு – ரூ.1,100,190/-
(11) கொள்ளுப்பிட்டி – ரூ.1,260,200/-
(12) மாளிகாவத்தை – ரூ.4,000,000/-
(13) ஏனைய நன்கொடையாளர்கள் – ரூ.558,000/-

இதேவேளை இந்த நிதி ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் வேலைப்பாட்டு நிறுவனம் (UNWRA) போன்ற தகுந்த நிறுவனங்கள் மூலம் காசா குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் என CDMF கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இந்த நன்கொடைகளைக் கண்காணிப்பதற்கும், பலஸ்தீன் மக்களின் நலனுக்காக இந்த நிதியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவி செய்யுமாறு பலஸ்தீன் தூதரகத்தையும் CDMF இனுடைய தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஷ் நூர்டீன் அவர்கள் பலஸ்தீனுக்கான இலங்கை தூதுவரை கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

குழந்தைகள் பாதிக்கப்படும் போது அந்த உணர்வு மேலும் அதிகரிக்கும். இதன் காரணமாகவே பலஸ்தீன் குழந்தைகளின் நிலை குறித்து இலங்கை முஸ்லிம்கள் கவலைப்படுகிறார்கள்.

இந்த அநீதியை எதிர்த்து போராடுவதும், பலஸ்தீன் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும் அவர்களின் விருப்பமாக இருக்கிறது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...