நாடளாவிய ரீதியில் சிறப்பாக நடைபெற்ற புனித ஹஜ் பெருநாள் தொழுகை

Date:

நாடளாவிய ரீதியில் பல்வேறு  இடங்களில் ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (17)  சிறப்பாக நடைபெற்றன.

ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின்னர் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து வருவதோடு, உணவு பண்டங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை…

காத்தான்குடி மாவட்டத்தின் பிரதான பெருநாள் தொழுகை  நகர சபை மைதானத்தில் நடைபெற்றது. அதில், சுமார் 5,000 திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்திலும் மூர்வீதி ஜும்மா பள்ளிவாசலில் ஹஜ் பெருநாள் நிகழ்வுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் நோன்புப் பெருநாள் தொழுகை புத்தளம் ஸாஹிரா பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.

மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. தொழுகையினை ஆர்.இமாம் மௌலவி நிகழ்த்தினார்.

கிண்ணியா குறிஞ்சாக்கேனி வீசி மைதானத்தில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.

வவுனியா தவ்ஹீத் ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை..

கல்முனை  ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் முஹம்மதிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் களின் ஏற்பாட்டில் புனித ஹஜ் பெருநாள் நபிவழித் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள் தொழுகை

சாய்ந்தமருதில் இடம்பெற்ற தொழுகை..

பேருவளை மஸ்ஜித் ரியாளுஸ் ஸாலிஹீன் வளாகத்தில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை.

அக்கரைப்பற்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

Popular

More like this
Related

வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளுக்கு நீர் வெட்டு !

அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை பகுதிகளில் இன்று...

ஹிரோஷிமா தினம்: மனித வரலாற்றின் ஆறாத வடுவும் அணுஆயுதங்களற்ற உலகத்திற்கான குரலும்

இரண்டாம் உலகப் போரின் உச்சக்கட்டம். 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6-ஆம் தேதி,...

பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணை விடுமுறை: கல்வி அமைச்சு!

2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுசரணையின் கீழ்...

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள...