அருள் மழையில் நனையும் ஹாஜிகள்:மழையையும் பொருட்படுத்தாது தவாப் செய்கின்ற ஒர் அருமையான காட்சி

Date:

துல் ஹஜ் 11ஆவது நாளான இன்று மக்காவில் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வெப்ப நிலைமை 50 டிகிரியை தாண்டியிருக்கின்ற நிலையில் அங்கு மழை பொழிய ஆரம்பித்துள்ளது.

அல்லாஹ்வின் அருள் கடும் உஷ்ணத்ததோடு ஹஜ் செய்கின்ற மக்களுக்கு இறங்கிய ஒரு உணர்வை இந்த மழை ஏற்படுத்தியிருக்கிறது.

கஅபாவைச் சூழ தவாப் செய்து கொண்டிருக்கின்ற மக்கள் அந்த மழையையும் பொருட்படுத்தாது தவாப் செய்கின்ற அந்த அருமையான காட்சி இந்த வீடியோவில் காண்பிக்கப்படுகின்றது.

மக்காவில் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது இருக்கின்ற கடும் வெப்ப நிலைமை 50 டிகிரியை தாண்டியிருக்கின்ற நிலையில் இது வரைக்கும் 20 பேர் வரை மரணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்று மக்காவில் மழை பெய்திருக்கின்ற செய்தி அங்கிருக்கின்ற மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகிருக்கின்றது.

கஅபாவை சூழ தவாப் செய்கின்ற மக்கள் மழையில் நனைந்தவாறு தங்களுடைய கடமையான தவாப் செய்கின்ற காட்சியானது அவர்கள் எவ்வளவு தூரம் அந்த உஷ்ணத்தை தாங்கிக்கொண்டு மழை எதிர்ப்பார்த்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக உள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...