இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே பாலம் அமைக்கும் திட்டத்துக்கான சாத்தியக்கூறு உள்ளமை தொடர்பான ஆய்வுப் பணிகள் விரைவில் நிறைவடையுமென்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்கு வருகை தந்தபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்குமிடையே கடல் வழியாக 23 KM க்கு பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இலங்கை – இந்தியாவுக்கிடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகள் விரைவில் நிறைவடையும்” என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.